நிலம்
நெருங்கிய ஒருவரால்
தொலைக்கப்பட்ட நிலம்
முறுக்கேறிய கொச்சைக்கயிறாக வரிவரிக்கோடுகளுடன்
மேடு பள்ளமென நீண்டு கிடக்கிறது.
நொடிக்கு நொடி
ஆடிக்கொண்டிருந்த தசைகள்
செங்குருதியின் ஓட்டமின்றி
காய்ந்து கிடக்கின்றன..
பண்பட்ட மேய்ச்சல்நிலம்
கவனிப்பின்றி தரிசு நிலமாகி
கைவிடப்படட்டபின்
கைநீட்டி யாசிக்கிறது,
பேருந்துகள் அங்குமிங்கும் அலைந்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நண்பகல் பொழுதில்
உச்சி வெயிலின் கீழ் உலகம் கட்டுண்டு கிடக்கிறது..
#வெற்றிச்செல்வன்